1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 17 பிப்ரவரி 2026 (10:26 IST)

குழந்தையை வாடகை காரில் மறந்துவிட்டு இறங்கிய தம்பதி.. 1 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார்..

குழந்தையை வாடகை காரில் மறந்துவிட்டு இறங்கிய தம்பதி.. 1 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார்..
பெங்களூருவில் வாடகை காரில் தூங்கிக்கொண்டிருந்த நான்கு வயது குழந்தையை மறந்துவிட்டு காரில் இருந்து தம்பதியினர் இறங்கிய நிலையில், போலீசார் அதிரடியாக செயல்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்டனர். 
 
பிப்ரவரி 14 அன்று, ஒரு தம்பதியினர் சுற்றுப்பயணம் முடிந்து வீடு திரும்பியபோது, கார் நின்றவுடன் இறங்கியுள்ளனர். ஆனால், குழந்தை பின் இருக்கையில் தூங்கிக்கொண்டிருப்பதை அவர்கள் கவனிக்க தவறியதால், கார் குழந்தையுடன் அங்கிருந்து சென்றுவிட்டது.
 
உடனடியாக பதற்றமடைந்த பெற்றோர், போலீஸ் அவசர உதவி எண்ணான 'நம்மா 112'க்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்த இரண்டு நிமிடங்களில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காரின் எண் மற்றும் அதன் நேரடி இருப்பிடத்தைக் கண்டறிந்த போலீசார், ஓட்டுநரை தொடர்புகொண்டனர். தனது காரில் குழந்தை இருப்பதை உறுதி செய்த ஓட்டுநர், உடனடியாக திரும்பி வந்து பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைத்தார்.
 
பெங்களூரு போலீசாரின் இந்த அதிவேக நடவடிக்கையைப் பலரும் பாராட்டி வருகின்றனர். அதே வேளையில், குழந்தையை மறந்துவிட்டு காரில் இருந்து இறங்கிய பெற்றோரின் கவனக்குறைவை கண்டித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. போலீசார் அந்த பெற்றோருக்குத் தகுந்த அறிவுரைகளை வழங்கி அனுப்பினர்.
 
Edited by Siva