1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

தவெக கூட்டணியில் காங்கிரஸ் உறுதி.. காங்கிரஸ் உடைவதும் உறுதி.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

rahul vijay
தமிழக அரசியலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நிலவும் விரிசல், புதிய அரசியல் திருப்பங்களுக்கு வழிவகுத்துள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது கிட்டத்தட்ட உறுதி என்று அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். அதேவேளையில், இந்த அதிரடி முடிவால் தமிழக காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைவது உறுதி என்றும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒரு தரப்பினர் திமுகவுடனான நீண்டகால உறவை முறிக்க விரும்பவில்லை. ஆனால், மற்றொரு தரப்பினர் விஜய்யின் எழுச்சியை பயன்படுத்தி 'ஆட்சியில் பங்கு' என்ற இலக்கை அடைய துடிக்கின்றனர். 
 
இந்த முரண்பட்ட கருத்துகளால் கட்சிக்குள் கோஷ்டி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஒருவேளை மேலிடம் தவெகவோடு கூட்டணி வைத்தால், திமுக ஆதரவு நிலைப்பாடு கொண்ட முக்கிய தலைவர்கள் தனியாக பிரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
 
விஜய்யின் வருகை மற்ற கட்சிகளை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸிலும் ஒரு பெரிய பிளவை ஏற்படுத்தும் என்ற கணிப்பு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva