ஞாயிறு, 15 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

கூட்டணியின் சர்ச்சை அனைத்தையும் கார்கே பார்த்துக் கொள்வார்: செல்வப்பெருந்தகை

கூட்டணியின் சர்ச்சை அனைத்தையும் கார்கே பார்த்துக் கொள்வார்:  செல்வப்பெருந்தகை
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக - காங்கிரஸ் கூட்டணி விரிசல் குறித்த சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முக்கிய விளக்கமளித்துள்ளார். 
 
கூட்டணியில் நிலவும் தற்போதைய சிக்கல்கள் மற்றும் எம்பி மாணிக்கம் தாகூர் போன்றவர்களின் சர்ச்சைக்குரிய கருத்துகள் அனைத்தையும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கவனித்து வருவதாகவும், அவரே இது குறித்து இறுதி முடிவெடுப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
தேர்தல் கூட்டணி தொடர்பாக நிலவும் குழப்பங்கள் குறித்து கட்சி மேலிடத்திற்கு ஏற்கனவே விரிவான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய செல்வப்பெருந்தகை, இது குறித்து ஆலோசிக்க பெங்களூரு சென்றுள்ளார். அங்கிருந்து அவர் டெல்லிக்கு விரைந்து, ராகுல் காந்தி மற்றும் கார்கே ஆகிய இருவரையும் நேரில் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
 
கூட்டணியில் ஒருமித்த கருத்து ஏற்படாத சூழலில், மேலிடத்தின் தலையீடு மட்டுமே இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva