வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2026 (12:32 IST)

ஈரானுடன் போர்!.. அமெரிக்காவை ஏன் இழுத்துவிட்டீங்க!.. இஸ்ரேல் சொன்ன பதிலை பாருங்க!...

israel
ஈரான் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்வதற்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.. எனவே இஸ்ரேல் ஈரான் மீது முதல் தாக்குதலை ஆரம்பித்தது. அதன்பின் அந்த நாட்டோடு அமெரிக்காவும் சேர்ந்து கொண்டு ஈரானை தாக்க துவங்கியது.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணை மூலம் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.. இதைத்தொடர்ந்து வளைகுடா நாடுகளில் பதட்டம் ஏற்பட்டிருக்கிறது.. கடந்த மூன்று நாட்களில் நடந்த போரில் 600 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

சவுதி அரேபியாவில் ஒரு நட்சத்திர ஓட்டல் மற்றும் புர்ஜ் கலிஃபா கோபுரம் ஆகியவை சேதமடைந்திருக்கிறது. ஒருபக்கம், இஸ்ரேலின் பல பகுதிகளிலும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.. நேற்று கூட இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தில் ஈரான் தாக்குதல் நடத்தியது.  ஆனால் இஸ்ரேல் அதிபருக்கு எதுவும் ஆகவில்லை.

இந்நிலையில், செய்தியாளரிடம் இஸ்ரேல பிரதமர் நெதன்யாகு பேசிக்கொண்டிருந்தபோது ‘ஈரான் போரில் அமெரிக்காவை இஸ்ரேல் இழுத்து விட்டதா என்று ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.. அதற்கு பதில் சொன்ன நெதன்யாகு ‘இது மிகவும் கேலிக்குரிய விஷயம்.. டொனால்ட் டிரம்ப் உலகின் மிக வலிமையான தலைவர்.. அமெரிக்காவுக்கு எது சரி என அவர் நினைக்கிறாரோ அதை அவர் செய்கிறார்’ என பதில் சொல்லியிருக்கிறார்..