1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. egg price in tamilnadu gone down

ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா போரால் குறைந்த முட்டை விலை!...

egg
அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஏற்கனவே ஈரான் நாட்டின் தலைவர் கமேனி இறந்து விட்டார். ஈரானில் தற்போது புதிய தலைவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்..

ஈரானின் தலைநகர் பெஹ்ரான் மீது இஸ்ரேல் அரசு பலமாக தாக்கியதில் பல கட்டிங்கள் சேதமடைந்தது. ஒரு பக்கம் அமெரிக்காவும் ஈரானை தாக்கி வருகிறது. இதையடுத்து வளைகுடா நாடுகளில் அமைந்திருக்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க விமான போர்த்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஏற்கனவே துபாய், குவைத், பஹ்ரின், அபுதாபி போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது மட்டுமில்லாமல் துபாயில் ஒரு நட்சத்திர ஹோட்டல் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது.. துபாயில் உள்ள புர்ஜ் ஜலிபா டவரிலும் தாக்குதல் நடந்தது.

இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் தகுந்து பதிலடி கொடுப்போம் என ஈரான் அறிவித்திருப்பதால் போர் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் என தெரிகிறது.. இந்நிலையில், இந்த போர் காரணமாக தமிழகத்தில் முட்டை விலை குறைந்திருக்கிறது.. போர் சூழலால் நாமக்கல்லில் இருந்து துபாய், கத்தார், ஓமன், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு தினசரி ஏற்றுமதியாகும் முட்டையின் அளவு 50 லட்சத்திலிருந்து 10 லட்சமாக சரிந்துள்ளது. இதனால் முட்டைக்கான கொள்முதல் விலை ஒரே நாளில் 20 காசுகள் குறைந்து 4.60 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஈரான் - அமெரிக்கா போர் எதிரொலி!.. மாநிலங்களுக்கு ஒன்றிய உள்துறை அலார்ட்!...