1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. central warned all the states related to war

ஈரான் - அமெரிக்கா போர் எதிரொலி!.. மாநிலங்களுக்கு ஒன்றிய உள்துறை அலார்ட்!...

war
ஈரான் நாட்டு அரசிடம் அமெரிக்கா நடத்திய அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் 2 நாட்களுக்கு முன்பு தாக்குதலை துவங்கியது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் தலைவர் கமேனி கொல்லப்பட்டார். எனவே, ஈரானில் தற்போது புதிய தலைவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்..

ஈரானின் தலைநகர் பெஹ்ரான் மீது இஸ்ரேல் அரசு பலமாக தாக்கியதில் அங்கு பல கட்டிங்கள் சேதமடைந்தது. ஒரு பக்கம் அமெரிக்காவும் ஈரானை தாக்கி வருகிறது. இதையடுத்து வளைகுடா நாடுகளில் அமைந்திருக்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க விமான போர்த்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஏற்கனவே துபாய், குவைத், பஹ்ரின், அபுதாபி போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது மட்டுமில்லாமல் துபாயில் ஒரு நட்சத்திர ஹோட்டல் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது.. துபாயில் உள்ள புர்ஜ் ஜலிபா டவரிலும் தாக்குதல் நடந்தது.

இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் தகுந்து பதிலடி கொடுப்போம் என ஈரான் அறிவித்திருப்பதால் போர் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் என தெரிகிறது.. இந்நிலையில், இந்த போரால் இந்தியாவில் வன்முறை சம்பவங்கள், போராட்டங்கள் நடைபெற வாய்ப்பிருப்பதாக இந்தியாவில் உள்ள அனைத்து  மாநிலங்களின் டிஜிபி மற்றும் தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி எச்சரித்திருக்கிறது.

ஏற்கனவே சென்னையில் உள்ள அமெரிக்கா தூதகரத்தை முற்றுகையிட சில இஸ்லாமியை இயக்கங்கள் சென்றது. அதன்பின் அவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இந்த பக்கம் ஏன் வறீங்க?. நீங்க என்ன விஐபி-யா?!.. அசிங்கப்பட்ட வானதி சீனிவாசன் (வீடியோ)..