1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tripur district sp appointed for enquiry on arul vignesh

அருள் விக்னேஷ் மீதான புகார்!.. திருப்பூர் மாவட்ட எஸ்.பி. விசாரணை அதிகாரியாக நியமிப்பு

arul vignesh
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக புகார் எழுந்தது.. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என தவெக மறுத்த நிலையில் தற்போது பெண் கலெக்டர் மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் அளித்தது தெரியவந்தது .

நீதிமன்றமும் அழுத்தம் கொடுத்ததால் தற்போது அருள் விக்னேஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி விசாரிக்க கூடாது.. வேறொரு அதிகாரியை நியமிக்க வேண்டும்.. மேலும் அந்த விசாரணையை ஒரு ஐஜி நிலையில் இருக்கும் அதிகாரி கண்காணிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, அருள் விக்னேஷ் புகாரில் திருப்பூர் மாவட்ட எஸ்.பி சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக செயல்படுவார் எனவும் ஐஜியான காமினி வழக்கு விசாரணையை மேற்பார்வையிடுவார் எனவும் தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தீபத்தூணில் தீபம் ஏற்றும் உத்தரவை அமுல்படுத்துங்க.. மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு...