1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. many flights are cancelled due to iran war

போர் எதிரொலி!.. 33 விமான சேவைகள் ரத்து!.. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி..

airport
அணுஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் போரை துவங்கியுள்ளன. கடந்த இரண்டு நாட்களாகவே ஈரானில் பல இடங்களும் தாக்கப்பட்டது.. குறிப்பாக ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பல கட்டிடங்கள் சேதமடைந்திருக்கிறது. அதேபோல், இந்த தாக்குதலில் ஈரானிய தலைவர் கமேனி மரணமடைந்தார்..

அதற்கு பதிலடியாக ஈரான் அமெரிக்கா போர்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருகும் வளைகுடா நாடுகளை தாக்கி வருகிறது.. போர் அபாயம் சூழ்ந்திருப்பதால் மத்திய கிழக்கு நாடுகள் தங்களை விமான சேவையை நிறுத்திவிட்டன. இதனால் விமான சேவைகள் முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கிறது..

சென்னையில் கடந்த 28ஆம் தேதி முதல் துபாய் அபுதாபி, பக்ரைன், மஸ்கட் செல்லும் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகள் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இன்றோடு சேர்த்து 36 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது..

மூன்றாவது நாளான இன்றும் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.. எனவே துபாய், அபுதாபி, சார்ஜா, மஸ்கட் உள்ளிட்ட நாட்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஒருபக்கம், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யவும் பயணிகளும் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு பயணம் தொடர்பான தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்...
About Writer
Mahendran