1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. iran attack saudi arabie oil company

சவுதி அரேபியா எண்ணெய் நிறுவனம் மீது தாக்குதல்!.. ஈரான் அதிரடி..

iron
அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ராணுவ படைகள்  தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் தலைவர் கமேனியும் அவரின் குடும்பத்தை சேர்ந்த 17 பேரும் கொல்லப்பட்டார்.

ஈரானின் தலைநகர் பெஹ்ரான் மீது இஸ்ரேல் அரசு தாக்கியதில் அங்கு பல கட்டிங்கள் சேதமடைந்தது. ஒரு பக்கம் அமெரிக்காவும் ஈரானை தாக்கி வருகிறது. இதையடுத்து வளைகுடா நாடுகளில் அமைந்திருக்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க விமான போர்த்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஏற்கனவே துபாய், குவைத், பஹ்ரின், அபுதாபி போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது மட்டுமில்லாமல் துபாயில் ஒரு நட்சத்திர ஹோட்டல் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது.. துபாயில் உள்ள புர்ஜ் ஜலிபா டவரிலும் தாக்குதல் நடந்தது.

இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் தகுந்து பதிலடி கொடுப்போம் என ஈரான் அறிவித்திருப்பதால் போர் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் என தெரிகிறது.. இந்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோ மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதனால் அந்த இடம் தீப்பற்றி எரிகிறது. அதை அணைக்கும் முயற்சிகள் ஊழியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். எங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் திருப்பி தாக்குவோம் என வளைகுடா நாடுகள் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
About Writer
Mahendran