தொடர்புடைய செய்திகள்
- ஈரான் போரால் இந்தியாவுக்குதான் அதிக பாதிப்பு!.. அதிர்ச்சி செய்தி....
- ஈரானுடன் போர்!.. அமெரிக்காவை ஏன் இழுத்துவிட்டீங்க!.. இஸ்ரேல் சொன்ன பதிலை பாருங்க!...
- சவுதி அரேபியா எண்ணெய் நிறுவனம் மீது தாக்குதல்!.. ஈரான் அதிரடி..
- ஈரான் - அமெரிக்கா போர் எதிரொலி!.. மாநிலங்களுக்கு ஒன்றிய உள்துறை அலார்ட்!...
- ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா போரால் குறைந்த முட்டை விலை!...
மரியாதையா ட்ரீட் பண்ணா பேச்சுவார்த்தை ரெடி!.. இறங்கி வரும் ஈரான்!..
அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என சொல்லி ஈரான் நாட்டின் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் கடந்த சில நாட்களாகவே அந்த நாட்டின் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் பல பகுதிகள் சேதமடைந்திருக்கிறது.. குறிப்பாக ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது.. இதுவரை அங்கு 600க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும் அமெரிக்க ராணுவத்தளங்கள் அமைந்திருக்கும் வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது..
இதனால் வளைகுடா நாடுகளில் பதட்டம் ஏற்பட்டிருக்கிறது.. அங்கு விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கிறது. வளைகுடா நாடுகளுக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டிருக்கிறது.. இதனால், வளைகுடா நாடுகளிலிருந்து வெளியேற முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இந்த போர் எப்போது முடியும் என்கிற கலக்கம் உலக நாடுகளிடம் ஏற்பட்டிருக்கிறது.. இந்நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஈரான் அறிவித்திருக்கிறது..
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஈரானின் உச்சபட்ச தலைவரின் பிரதிநிதி எந்த அழுத்தமும் தராமல் கண்ணியத்துடன் நடத்தினால் மட்டுமே நாங்கள் பேச்சு வார்த்தை நடத்துவோம் என கூறியிருக்கிறார்.. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் எல்லாவற்றையும் இழந்துவிட்டது.. பெரிய தலைவர்கள் இறந்துவிட்டனர். இனிமேல் அங்கு பேச்சு நடத்தை நடத்த ஒன்றுமில்லை என தெரிவித்திருக்கிறார்..