1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By BALA
Last Modified: புதன், 8 ஏப்ரல் 2026 (07:52 IST)

பணிந்த அமெரிக்கா!.. கெத்து காட்டிய ஈரான்!.. முடிவுக்கு வந்த போர்!...

iran america
ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக்கூடாது எனக்கூறி அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28ம் தேதி அந்நாட்டின் மீது போர் தொடுத்தன. ஒரு மாதத்திற்கு மேல் போர் நடந்து வந்த நிலையில் தற்போது அந்த போர் முடிவுக்கு வந்திருக்கிறது. ஈரான் ஒரு சின்ன நாடு.. அதை தாக்கினால் அந்த நாடு பணிந்து விடும்.. அந்த நாட்டில் இருக்கும் எண்ணெய் வளங்களை எடுத்துக் கொள்ளலாம் என அமெரிக்கா கணக்கு போட்டது.

ஆனால் அந்த நாடு திருப்பி தாக்கியதில் அமெரிக்கா ஆடிப்போய்விட்டது. அதோடு இந்தியாவில் உள்ள பல நாடுகளுக்கும் வளைகுடா நாடுகளில் இருந்து வரும் எண்ணெய் கப்பல்கள் ஈரானின் கடல் பகுதியான ஹார்மூஸ் ஜலசந்தி  வழியாகத்தான் செல்லும். ஆனால் அந்த பாதையில் எந்த கப்பல் வந்தாலும் தாக்குவோம் என ஈரான் சொன்னது அமெரிக்காவுக்கு பெரிய தலைவலியாக மாறியது.

மேலும் 10 நாட்களுக்கு முன்பு ஏப்ரல் 7ம்தேதி வரைக்கும்தான் கெடு. ஹார்மூஸ் நீரிணையை ஈரான் திறக்காவிட்டால் அந்த நாட்டின் முக்கிய பாலங்கள், மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். ஆனால் ஈரான் அடிபணியவில்லை.. நேற்று செய்திகளிடம் பேசிய டிரம்ப் ‘இன்று இரவு மொத்த நாகரீகமே அழியப் போகிறது.. ஈரான் இனி எழவே முடியாது.. அந்த நாட்டை அழிக்கப் போகிறோம்’ என்றெல்லாம் ஆவேசப்பட்டார் டிரம்ப். இதையடுத்து ஈரானில் முக்கிய பகுதிகள் தாக்கப்படும் என அச்சம் எழுந்தது.. ஒருபக்கம் ஈரான் திருப்பித் தாக்கும் என்பதால் இஸ்ரேலில் ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் பல இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என இஸ்ரேல் அறிவித்தது. எனவே இன்று இரவு என்னாகுமோ என்கிற அச்சம் உலக நாடுகளில் எழுந்தது.

ஆனால் சந்தோஷப்படும் விதமாக இரண்டு வார போர் நிறுத்தத்திற்கு ஈரானும், அமெரிக்காவும் சம்மதித்திருக்கிறது.. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் நடத்திய பேச்சு வார்த்தையில் இந்த உடன்படிக்கை ஏற்பட்டிருக்கிறது. ஹார்மோஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்கும் நிபந்தனையுடன் ஈரான் மீதான தாக்குதலை இரண்டு வாரங்கள் நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.

ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தை அனுமதிப்பது, அமெரிக்கா தனது தாக்குதலை நிறுத்துவது, ஈரான் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவது, ஈரானில் ஏற்பட்ட சேதங்களுக்கு முழுமையான இழப்பீடை அமெரிக்கா வழங்குவது, ஈரான் மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதார தடைகளையும் அமெரிக்கா நீக்குவது போன்ற ஈரானின் 10 நிபந்தனைகளை அமெரிக்காவும் ஏற்றுக் கொண்டுள்ளது..

இதையடுத்து, ஒரு மாதத்திற்கு மேல் நடந்து வந்த போர் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இதனால், ஈரான் நாட்டு மக்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகிறார்கள்.. மேலும் வருகிற 10 தேதி மீண்டும் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளது. அதில் நிரந்தர உடன்படிக்கை ஏற்பட்டால் நிரந்தரமாகவே இந்த போர் முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது..