1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. air india increased its ticket price

எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...

air india
ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் எரிபொருள் கிடைக்கவில்லை.. அதற்கு காரணம் இந்தியாவில் பல நாடுகளும் தங்களுக்கு தேவையான கச்சா எண்ணெயை பெரும்பாலும் வளைகுடா நாடுகளில் இருந்துதான் வாங்குகின்றன. ஆனால் அமெரிக்காவுக்கு உதவுவதாக சொல்லி வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது இதன் காரணமாக ஈரனின் கடல் வழியான ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்கள் வருவது தடை செய்யப்பட்டிருக்கிறது..

இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் எரிபொருள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை.. இதன் காரணமாக பல ஹோட்டல்கள் மூடப்பட்டிருக்கிறது. அதோடு சில தனியார் பெட்ரோல் பங்குகளில்  பெட்ரோல், டீசல் விலை அதிகரித்திருக்கிறது.. அதேபோல் விமானத்திற்கு பயன்படுத்தப்படும் வெள்ளை பெட்ரோல் விலையும் அதிகரித்திருக்கிறது..

ஒருபக்கம் ஏர் இந்தியா விமான நிறுவனம் ஏற்கனவே தனது டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியிருந்தது. இந்நிலையில், எரிபொருள் விலையேற்றம் காரணமாக மீண்டும் தனது விமான கட்டணத்தை ஏர் இந்தியா நிறுவனம் உயர்த்தியிருக்கிறது. உள்நாட்டு டிக்கெட் கட்டணம் ரூ.299 முதல் ரூ.899 வரையும், சர்வதேச கட்டணம் ரூ.2200 முதல் 26 ஆயிரம் வரை உயர்ந்திருக்கிறது.

சர்வதேச விமான கட்டண உயர்வு வருகிற 10-ம் தேதியும், உள்நாட்டு கட்டண உயர்வு நாளை முதலும் அமுலுக்குவருவதாக ஏர் இந்தியா அறிவித்திருக்கிறது.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...