தொடர்புடைய செய்திகள்
- லெபனான் குடியிருப்பு பகுதியை தாக்கிய இஸ்ரேல்!.. வீடுகள் தரைமட்டம்!. பலரும் பலி!..
- நாளை வரை கெடு.. அமைதி ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் ஈரானை முழுமையாக அழிப்பேன்: டிரம்ப் எச்சரிக்கை
- ஈரானில் சிக்கித் தவித்த 345 இந்திய மீனவர்கள்.. ஆர்மீனியா வரை சாலை பயணம்.. பின்னர் விமானத்தில் சென்னை வருகை..!
- ஈரான் தளபதி காசிம் சுலைமானியின் உறவினர்கள் அமெரிக்காவில் கைதா? குடும்பத்தினர் சொல்வது என்ன?
- எலிகளுக்க்கு கருத்தடை திட்டம்: ரூ. 1.2 கோடி மதிப்பிலான புதிய முயற்சி!
பாகிஸ்தான் சொன்ன 2 கட்ட அமைதி திட்டம்.. அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வருமா?
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றத்தை தணிக்க, பாகிஸ்தான் புதிய 'இரண்டு கட்ட அமைதித் திட்டத்தை' முன்வைத்துள்ளது. இந்த திட்டத்தின்படி, முதற்கட்டமாக உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும். அதை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு நிரந்தர உடன்பாடு எட்டப்படும்.
இந்தத் திட்டம் வெற்றி பெற்றால், சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் வாய்ப்பு உள்ளது. விரைவில் இந்த அமைதி ஒப்பந்தம் அமலுக்கு வரக்கூடும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக இரு நாடுகளும் மாறி மாறி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வந்த நிலையில், இந்த தூதரக முயற்சி ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் வடிவமைத்த இந்த முன்மொழிவு நேற்று இரவு வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் ஆகிய இரு நாடுகளுக்கும் பகிரப்பட்டுள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் போர் அச்சம் நிலவும் சூழலில், இந்த உடனடி போர் நிறுத்த முயற்சி உலக நாடுகளால் உற்றுநோக்கப்படுகிறது.
Edited by Siva
