1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. kamalhaasan important announcement about nomination

கொடுத்த காச திருப்பி வாங்கிக்கோங்க!.. கமல் அதிரடி அறிவிப்பு...

kamal
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் கமல்ஹாசன். நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்த நிலையில் அவரின் நண்பர் கமல் அரசியலுக்கு வந்தார். இதை ரஜினியே எதிர்பார்க்கவிலை. மக்கள் நீதி மையம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி நாங்கள் மையமாக இருப்போம் என்று சொல்லி மதுரையில் மாநாடு நடத்தினார் கமல்.

அந்த கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது.. ஒரு சட்டமன்றத் தேர்தலிலும் ஒரு பாராளுமன்ற தேர்தலிலும் கட்சி போட்டியிட்டது. ஆனால் எதிர்பார்த்த வாக்குகளை அக்கட்சி பெறவில்லை. அதோடு கோவையில் போட்டியிட்ட கமலும் தோற்றுப் போனார்.
கட்சி ஆரம்பித்த புதிதில் திமுகவை திட்டிய கமல் ஒரு கட்டத்தில் திமுகவின் ஆதரவாளராக மாறினார்.. இப்போது இந்த நிலைப்பாடு நாட்டுக்கு தேவை.. நாட்டின் நலனே முக்கியம் என்று பேட்டி கொடுத்தார்..

மேலும் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையம் திமுகவுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. அக்கட்சிக்கு மூன்று தொகுதிகள் வரை ஒதுக்க முக ஸ்டாலின் முன் வந்தும் தேர்தலில் இருந்து விலகுவதாக கமல் அறிவித்தார். திமுகவுடன் கூட்டணி அமைப்பதால் எப்படியும் வெற்றிபெற்றுவிடலாம் என நம்பி 60 பேர் ரூ. 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி கட்சி தலைமையிடம் விருப்பமனுவை வாங்கினர்.

ஆனால், தேர்தலில் போட்டியில்லை என கமல் அறிவித்ததும் அவர்களில் பலரும் விருப்பமனு தொகையை திருப்பி கேட்டதாக செய்திகள் வெளியானது. 60 பேர் தலா 50 ஆயிரம் என்றால் 30 லட்சம் ரூபாய் வருகிறது.. ஆனால் அதை திருப்பிக் கொடுக்க முடியாது.. அது கட்சி நிதிக்கு சென்று விட்டது என கமல் சொல்லிவிட்டதாக செய்திகள் வெளியானது. இதை பலரும் ட்ரோல் செய்தனர்..

ஆனால் அது உண்மையில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. நாளை முதல் 16ம் தேதிக்குள் விருப்பமனு கட்டணத்தை சென்னையில் உள்ள மக்கள் நீதி மையத்தின் தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என மக்கள் நீதி மையம் அறிவித்திருக்கிறது.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
பணிந்த அமெரிக்கா!.. கெத்து காட்டிய ஈரான்!.. முடிவுக்கு வந்த போர்!...