தொடர்புடைய செய்திகள்
- நாளொன்றுக்கு ரூ.2500 கோடி இழந்து வரும் எலான் மஸ்க்
- Dunzo ஊழியர்கள் திடீர் போராட்டம். பல மாதங்களாக ஊக்கத்தொகை இல்லை என குற்றச்சாட்டு
- கூட்டுறவு துறையில் 6500 புதிய ஊழியர்கள் நியமனம்: அமைச்சர் பெரியசாமி தகவல்!
- 'மின்னஞ்சல் கூட அனுப்பாமல் பணிநீக்கம்' - குமுறும் ஐ.டி. ஊழியர்கள்
- வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்: அதிரடி அறிவிப்பு
மீண்டும் 10,000 ஊழியர்கள் பணிநீக்கம்: கூகுள் எடுத்த அதிர்ச்சி முடிவு
கூகுள் நிறுவனம் ஏற்கனவே ஒரு சில ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது மீண்டும் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை இருப்பதன் காரணமாக முக்கிய நிறுவனங்களில் இருந்து ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்
அமேசான் பேஸ்புக் ட்வீட்டர் உள்பட பல நிறுவனங்களில் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கூகுள் நிறுவனத்தில் 10,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
பணியாளர்களின் செயல்திறன் அடிப்படையில் வேலை நீக்கம் செய்யுமாறு அந்தந்த பிரிவின் மேலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் ஊழியர்களை பணி நீக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
