திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 நவம்பர் 2022 (11:19 IST)

Dunzo ஊழியர்கள் திடீர் போராட்டம். பல மாதங்களாக ஊக்கத்தொகை இல்லை என குற்றச்சாட்டு

Dunzo
பொருட்களை டெலிவரி செய்யும் நிறுவனமான Dunzo நிறுவனத்தின் ஊழியர்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Dunzo  நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக ஊக்கத் தொகை வழங்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்
 
இது குறித்து Dunzo நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த பதிலும் வராததால் தமிழகத்தின் Dunzo தலைமையிடமான சென்னை மயிலாப்பூரில் இன்று ஊழியர்கள் திடீரென போராட்டம் நடத்தினர்
 
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊக்கத்தொகை குறித்து நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக காவல்துறையினர் உறுதி அளித்ததால் போராட்டத்தை நிறுத்தி விட்டு ஊழியர்கள் கலந்து சென்றதாக கூறப்படுகிறது 
 
பல மாதங்களாக ஊழியர்கள் தங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவில்லை என Dunzo ஊழியர்கள் குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran