வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2022 (17:45 IST)

கூட்டுறவு துறையில் 6500 புதிய ஊழியர்கள் நியமனம்: அமைச்சர் பெரியசாமி தகவல்!

periyasamy
கூட்டுறவு துறையில் புதிதாக 6500 ஊழியர்கள் நியமனம் செய்யப்பட இருப்பதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
 
திமுக ஆட்சி ஆரம்பமானதில் இருந்து பல்வேறு துறைகளில் புதிய ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த வகையில் கூட்டுறவுத்துறையில் வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் புதிதாக 6500 ஊழியர்கள் நியமனம் செய்யப்பட இருப்பதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். 
 
மேலும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி குடும்ப  தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்
 
அமைச்சர் பெரியசாமி அவர்களின் இந்த இரண்டு தகவல்கள் பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
 
Edited by Mahendran