1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. elephant saving a man from nepal flood video

நேபாள வெள்ளம்!.. தண்ணீரில் சிக்கியவரை யானை காப்பாற்றியதா?!.. வைரல் வீடியோ!...

elephant
நேற்று மதியம் வடக்கு நேபாளத்திற்கு மேல் உள்ள இமயமலை பகுதியில் இருந்து பனிப்பாறைகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த நீர் நேபாளத்திற்குள் புகுந்ததால் பல வீடுகளும், வாகனங்களும், கட்டிடங்களும் அடித்து செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி இதுவரைக்கும் 500க்கும் மேற்பட்டோர் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போது 1500க்கு மேற்பட்டவர்கள்  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஒருபக்கம் தமிழகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றனர். அவர்களின் 20 பேர் ஒரிடத்தில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதி 83 பேர் நிலைமை இதுவரை தெரியவில்லை. அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது..

நேபாளத்தில் பலரும் தங்கள் வாழ்வாதாரங்களையும், வீடுகளையும், குடும்பத்தினரையும் இழந்துள்ளனர். இந்நிலையில்தான் நேபாள வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் ஒருவரை ஒரு யானை சென்று காப்பாற்றுவது போல் ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இது உண்மை என நம்பி பலரும் தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் இந்த வீடியோ தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து ‘மனிதாபிமானம் மனிதருக்கு மட்டுமே உரித்தானதல்ல’ என பதிவிட்டிருக்கிறார். ஆனால், இது AI வீடியோ என பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இது சட்டமன்றமா? இல்லை சண்டை மன்றமா?.. பிரேமலதா Vs ஆதவ் அர்ஜுனா வாக்குவாதம்!...