1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. donald trump warning against iran on thread

1000 ஏவுகனை வச்சிருக்கோம்!.. ஈரானை அழிப்போம்!.. டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை....

iran america
அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக்கூறி ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி போரை தொடங்கியது. இதன் காரணமாக ஈரான் உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளில் இருந்தும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் கப்பல் வழித்தடமான ஹார்மூஸ் நீரிணையை ஈரான் அரசு மூடிவிட்டது.

இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் எரிபொருட்களின் விலையும் அதிகரித்தது. இதை முடிவுக்கு கொண்டு வர நினைத்த அமெரிக்க அதிபர்ர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் பேச்சுவார்த்தையில் நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டு இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தமானது..

ஆனால் ஹார்மூஸில் நாங்கள் கூறிய வழித்தடத்தில் மட்டுமே கப்பல்கள் வரவேண்டும்.. இல்லையென்றால் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் எச்சரித்தது.. அப்படி சென்ற சில கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.. இதனால் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை.. போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டோம்.. ஈரான் நாட்டை தாக்கி அழிப்போம்.. பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்துவோம்’ என சமீபத்தில் எச்சரித்து இருந்தார்..

ஒருபக்கம், இஸ்ரேலின் தாக்குதலால் உயிரிழந்த ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கில் ‘டிரம்பை கொல்ல வேண்டும்’ என சில ஈரானியர்கள் முழக்கமிட்டனர். இது டிரம்புக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் ‘என்னை படுகொலை செய்ய ஈரான் துணிந்தால் அந்நாட்டை அழிக்க ஆயிரம் ஏவுகணைகளை தயாராக வைத்திருக்கிறோம்.. இதற்கான உத்தரவுகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு விட்டது.. ஈரானை தரைமட்டமாக அமெரிக்க ராணுவம் எந்த நேரமும் தயாராக இருக்கிறது’ என கூறியிருக்கிறார்
.
About Writer
பாலகிருஷ்ணன்