தொடர்புடைய செய்திகள்
- சீனாவில் கடும் மழை!.. வெள்ளத்தில் சிக்கி 39 பேர் மரணம்!...
- ஈரான் மீது 2-வது நாளாக தாக்குதலை தொடங்கியது அமெரிக்க ராணுவம்! பங்குச்சந்தை இன்றும் ஆட்டம் காணுமா?
- தாத்தா மேல பாசம்!. வீடு வாங்க வச்சிருந்த பணத்தில் FIFA கால்பந்து டிக்கெட் வாங்கிய பேரன்!..
- அமெரிக்கா-ஈரான் மோதல்: இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு, சென்செக்ஸ் 1700 புள்ளிகள் வீழ்ச்சி
- இனி ஈரானுடன் பேச்சுவார்த்தை டைம் வேஸ்ட்.. அமெரிக்கா-ஈரான் இடையே புதிய மோதல்: போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது?
அமெரிக்காவுக்கு பதிலடி!.. ராணுவ தளங்கள் குறிவைத்து தாக்கும் ஈரான்.. பதட்டம் நீடிப்பு...
ஈரானுடன் அமெரிக்கா துவங்கிய போர் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இரு நாடுகளுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. ஆனாலும் ஈராணை மிரட்டுவது போல் அமெரிக்காவும், அதற்கெல்லாம் நாங்கள் பயப்படவில்லை என்பது போல ஈரானும் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
ஒருபக்கம் கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்லும் கப்பல் வழித் தடமான ஹார்மூச் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. அப்படியே தெரிந்தாலும் அந்த வழியாக செல்லும் சில கப்பல்கள் மீது ஈரான் தாக்குதலும் நடத்துகிறது.. இது அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை.. இது ஒப்பந்தத்தை மீறிய செயல் என அமெரிக்கா தொடர்ந்து சொல்லி வருகிறது..
சமீபத்தில் ஹார்மூஸ் நிரிணையை கடந்த சில கப்பல்கள் மீது ஈரான் தாக்கியதால் கோபம் அடைந்த அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இனிமேல் பேச்சுவார்த்தையில் பலன் இல்லை.. ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டோம்.. ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்தார். சொன்னது போலவே ஈரான் நாட்டின் பல இடங்களிலும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக குவைத், பஹ்ரைன், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறித்து ஈரான் ராணுவம் தாக்கி வருகிறது..
குவைத்தில் உள்ள அமெரிக்காவின் Patriot ஏவுகணை தடுப்பு அமைப்பு, கத்தாரில் உள்ள சேட்டிலைட் ஆண்டெனா மையம், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ எரிபொருள் சேமிப்பு நிலையங்ள் ஆகியவற்றை குறிவைத்து ஈரான் தொடர்ந்து தாக்கி வருகிறது. எனவே அங்கு மீண்டும் பதட்டம் ஏற்பட்டிருக்கிறது.