1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Udhayanidhi Stalin Holds Midnight Strategy Meeting with Father MK Stalin in Chennai After Tanjore Arrest Release

நள்ளிரவில் சென்னை வந்த உதயநிதி.. முதல்வேளையாக தந்தையை சந்தித்து முக்கிய ஆலோசனை..

Udhayanidhi Stalin
தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பாக, நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், நள்ளிரவில் திடீரென சென்னை திரும்பினார். தஞ்சாவூரில் இருந்து காரில் திருச்சிக்குச் சென்ற அவர், அங்கிருந்து நள்ளிரவு விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார்.
 
சென்னை விமான நிலையத்தில் திரண்டிருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து உதயநிதி நேரடியாக ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்குச் சென்றார். நள்ளிரவிலும் நடந்த இந்தச் சந்திப்பின் போது, இருவரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தனது அதிரடி கைது நடவடிக்கை, தவெக அரசு மேற்கொண்டு வரும் அரசியல் அழுத்தங்கள், மாநிலத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் குறித்தும் இருவரும் விரிவாக விவாதித்ததாகக் கூறப்படுகிறது. தஞ்சை சம்பவத்திற்குப் பிறகு, நள்ளிரவில் நடந்த இந்த ஸ்டாலின் - உதயநிதி அவசரச் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
About Writer
சிவலிங்கம்
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
குவிந்த திமுகவினர்!. திருச்சி நோக்கி யூடர்ன் போட்ட போலீஸ்!.. செம டிவிஸ்ட்!..