1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk government credited thousand rupees to women

பெண்களின் வங்கி கணக்கில் ரூ.1000 இன்று கிரெடிட்!.. 2500 எப்போ கிடைக்கும்?..

vijay
2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என அறிவித்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கழித்துதான் அந்த தொகை பெண்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. மேலும், அதோடு தகுதியுள்ள பல பெண்களுக்கு இந்த உரிமை தொகை கிடைக்கவில்லை என்கிற புகார் இருந்தது.

2026 தேர்தலில் போது திமுக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கான உரிமை தொகை 2 ஆயிரமாக உயர்த்தி தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தமிழக வெற்றிக் கழகம் பெண்களுக்கு மாதம் 2500 கொடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது. நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்றுப் போனது. மாறாக தவெக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

எனவே, தவெக அரசு 1000 கொடுக்குமா? இல்லை 2500 கொடுக்குமா? என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்ட நிலையில் கடந்த மாதம் 15ம் தேதி மகளிர் உரிமை பெறும் பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. அதேபோல் ஜூன் 15ஆம் தேதியான இன்று ஒரு கோடியே 31 லட்சம் பெண்களின் வங்கி கணக்கில் ரூ.1000 வர வைக்கப்பட்டிருக்கிறது. அனேகமாக தவெக 2500 ரூபாய் கொடுப்பதற்கு இன்னும் பல மாதங்களாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..
அடுத்த கட்டுரையில்
அமெரிக்காவில் ஒரு லட்சம்.. இந்தியாவில் 2 ஆயிரம்!.. மருந்து மோசடி அம்பலம்!..