1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. gulf countries support to donald trump operation iron gate

ஈரானுக்கு எதிரான ஆபரேஷன் அயன் கோட்!.. டிரம்புக்கு வளைகுடா நாடுகள் ஆதரவு...

donald
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா அந்த நாட்டின் மீது போரை தொடங்கியது. அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல் ராணுவம் தாக்கியதில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார்.

இது ஈரானுக்கு கோபத்தை ஏற்படுத்தவே, அமெரிக்காவுக்கு இராணுவ தளங்கள் அமைக்க உதவி செய்து வரும் வளைகுடா நாடுகளான கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், அபுதாபி போன்ற நாடுகளில் உள்ள ராணுவத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும் வளைகுடா நாடுகளில் இருந்து உலகமெங்கும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் கப்பல் வழித்தடமான ஹார்மூஸ் ஜலசந்தியையும் ஈரான் மூடியது. இது அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது...

கடந்த பல மாதங்களாகவே போர் நடைபெற்றாலும் ஈரானை அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதோடு ஈரான் மீது டிரம்ப் போர் நடத்துவதை அமெரிக்க மக்களே விரும்பவில்லை. சமீபத்தில் நடந்த அமெரிக்க பாராளுமன்ற இடைத்தேர்தலில் டிரம்பின் குடியரசு கட்சி தோல்வி அடைந்தது. இதற்கு ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்ததே முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.

எனவே, ஈரான் மீது போரை நிறுத்துதாக டிரம்ப் அறிவித்தாலும் ஈரானுக்கு எதிராக தரை மற்றும் கடல் வழி தடையை ஏற்படுத்துவதற்கான ஆபரேஷன் அயன்கோட் திட்டத்தை அவர் கையில் எடுத்துள்ளார்.

ஈரானின் கச்சா எண்ணெய் வியாபாரத்தை முடக்கவே டொனால்ட் ட்ரம்ப் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இந்நிலையில் இந்த ஆபரேஷன் அயன்கோட் திட்டத்திற்கு கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய முக்கிய வளைகுடா நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
டாஸ்மாக் பணம் ரூ.1.50 கோடி வழிப்பறி!.. காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி..