1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Britain PM Borris Johnson married his lover soon

காதலியை திருமணம் செய்கிறார் பிரிட்டன் பிரதமர்: ஆனால் அதிலும் ஒரு சிக்கல்!

பிரிட்டன்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் தனது காதலியை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
பல நாடுகளில் பிரதமர் குடியரசுத் தலைவர் பதவியில் இருக்கும் போது திருமணம் செய்து கொள்வதும், சிலர் திருமணம் செய்யாமல் காதலியுடன் சேர்ந்து வாழ்வதும் உண்டு. இந்த நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது தனது காதலியுடன் தம்பதியாக வாழ்ந்து வரும் நிலையில் அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
மேலும் திருமணம் செய்துகொள்ளும் முன்னரே கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் பிறந்து உள்ளார் என்பதும் அதுபோக முன்னாள் மனைவி மூலம் 2 மகன்கள் 2 மகள்கள் உள்ளனர் என்பதும், ஒரு முன்னாள் காதலி மூலம் ஒரு மகளும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் தற்போது காதலியை திருமணம் செய்து கொண்டால் முன்னால் மனைவிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்புக்காக ஒரு பெரும் தொகையாக ஒவ்வொரு வருடமும் சட்டப்படி அளிக்க வேண்டும் என்பதால் நிதி போரீஸ் ஜான்சன் நெருக்கடியில் உள்ளதாகவும், பிரதமரின் சம்பளம் இத்தகைய செலவுக்கு போதவில்லை என்பதால் சிக்கல் உள்ளதாகவும், ஆனாலும் இந்த சிக்கலிலும் அவர்  திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
இனி கோவில் நிதிநிலை அறிக்கையும் ஆன்லைனில்..! – புதிய உத்தரவு!