பிரதமர் மோடியின் கண்ணீரை ஏற்கிறேன் முன்னணி நடிகை டுவீட்
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.
இந்தக் கொரொனா தொற்றிற்கு சாதாரண மக்கள் முதல், அரசியல்தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், சினிமா நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்
தற்போது, ஒருநாளில் சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில் இன்று பிரதர் மோடி, கணொளிக் காட்சி மூலம் கொரொனா பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது மோடி, கொரொனா நம் அன்புக்குரியவர்களை பிரித்துவிட்டது என இரங்கல் தெரிவித்து கண்ணீர் வடித்தார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் பரவியது.
இதுகுறித்து நடிகை கங்கனா ரணாவத் தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியின் கண்ணீரை நான் ஏற்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
கண்ணீர் உண்மையோ அல்லது போலியோ உன்ணவுகளின் வலியை அறிந்து அவர்களின் மேல் அக்கறை கொண்டு அதை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒருசிலர் இதில் பிரச்சனையைக் கண்டுபிடிப்பார்கள். அந்தக் கண்ணீர் தெரிந்தல் என்ன? தெரியாவிட்டால் என்ன? அது நமக்கு முக்கியமா? பிரதமர் அவர்களே உங்கள் கண்ணீரை நான் கண்டுகொண்டேன். மக்களே ஆசிர்வாதத்தை துன்பமாக்காதீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பலரும் விமர்சனம் தெரிவித்துவருகின்றனர்.