1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk leader vijay will compaign in chennai tomorrow

நாளை பிரச்சாரம் ஸ்டார்ட்!.. எங்கெல்லாம் பேசுகிறார் விஜய்?...

vijay
தமிழக அரசியல் கடந்த 50 வருடங்களுக்கு மேல் அதிமுக Vs திமுக பயணித்து வந்த நிலையில் தற்போது களம் மாறியிருக்கிறது. ஏற்கனவே சினிமாத்துறையிலிருந்து பலரும் அரசியலுக்கு வந்து கட்சி துவங்கினார்கள். ஆனால் மக்களிடம் ஈடுபடவில்லை.  தற்போது விஜய் வந்திருக்கிறார்.. அரசியல்தான் இனிமேல் என் வாழ்க்கை.. திரும்பி செல்லும் திட்டம் இல்லை எனவும் அவர் கூறியிருக்கிறார். இந்நிலையில்தான், அவரின் தமிழக வெற்றிக் கழகம் வருகிற சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது. எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தவெக தனித்து களம் காண்கிறது..

ஒருபக்கம் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
தேர்தல் தேதி நெருங்கி விட்டதால் தமிழக அரசியல் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், பொதுக்கூட்டங்களிலும், நிர்வாகிகள் கூட்டத்தில் மட்டுமே பேசும் விஜய் மற்ற அரசியல் தலைவர்களைப் போல எல்லா தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்வாரா என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்தது..

எதிர்பார்த்தது போலவே தேர்தல் தொகுதி அறிவிக்கப்பட்டு 14 நாட்கள் ஆகியும் விஜய் தனது பிரச்சாரத்தை துவங்காமல் இருந்தார். ஒரு வழியாக தான் போட்டியிடும் தொகுதியான பெரம்பூர் உள்ளிட்ட 5 இடங்களில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் பெரம்பூரில் தேர்தல் ஆணையம் அனுமதி கொடுக்கவில்லை. அதனால், நேற்று அவர் மற்ற இடங்களிலும் அவர் பிரச்சாரம் செய்யவில்லை. இந்நிலையில்தான், நாளை பெரம்பூர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருக்கிறார்.

பெரம்பூர், திருவிக நகர் - பிற்பகல் 2 மணி
பெரவள்ளூர் - மாலை 5 to 6
திருமங்கலம் TV நகர் - இரவு 7 to 8
சிட்கோ நகர் - இரவு 7 to 8
அயனாவரம் - இரவு 8 to 10
அடுத்த கட்டுரையில்
ஈரான் போர்!.. கொரானாவை விட மோசமா இருக்கும்!.. ரஷ்ய அதிபர் வார்னிங்!..