1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. america announced war stop for five days

ஈரான் நாட்டை 5 நாளைக்கு தாக்கமாட்டோம்!. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு...

donald
கடந்த மாதம் 28ம் தேதி முதல் ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது என்று சொல்லி இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது. தாக்குதல் நடந்த முதல் நாளிலேயே ஈரான் உச்ச அதிபர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார். இதனால் கோபமடைந்த ஈரான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவ படைகளுக்கு தங்கள் நாடுகளில் இடம் கொடுத்துள்ள வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, துபாய், பஹ்ரைன், அபுதாபி போன்ற நாடுகளின் மீது ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது..

இதன் காரணமாக பல எண்ணெய் கிணறுகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. சில முக்கிய எண்ணெய் நிறுவனங்கள் மீதும் ஈரான் தாக்குதலில் நடத்தி இருக்கிறது. ஒருபக்கம் இந்தியாவிலுள்ள பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் ஹோர்மூச் நீரிணையை ஈரான் அரசு மூடிவிட்டது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது..,

இந்நிலையில், இன்று செய்தியாளரிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், எரிசக்தி உள் கட்டமைப்புகள் மீது 5 நாட்களுக்கு தாக்குதலை நிறுத்தப் போகிறோம்.. ஈரானுடன் கடந்த சில நாட்களாக திருப்திகரமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனால் 5 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும்’ என தெரிவித்திருக்கிறார்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
விமானத்தில் இருந்து 330 அடி தூக்கி எறியப்பட்ட பெண்.. அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அதிசயம்..!