1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. china lady coming in bentely car for work

4 கோடி காரில் சென்று பாத்திரம் கழுவும் வேலை செய்யும் சீன பெண்!. இணையத்தில் வைரல்..

china
ஒரு இடத்தில் சம்பளத்திற்காக வேலை செய்வதற்கு பல காரணங்கள் இருக்கும். குடும்ப தேவை, பணத் தேவை உள்ளிட்ட பல காரணங்களையும் சொல்ல முடியும். அதேபோல், எல்லா வேலைகளும் நம் மனதிற்கு பிடித்த வேலையாக அமையாது. மனதுக்கு பிடித்த மாதிரி வேலையோடு சம்பளமும் கிடைப்பது என்பது எல்லோருக்கும் அமையாது.

அது சிலருக்கு மட்டுமே அது அமையும். அந்த வகையில் சீனாவை சேர்ந்த ஒரு பெண் பணக்காரியாக இருந்தும் தன்னுடைய ஆத்ம திருப்திக்காகவும், தன்னுடைய சந்தோஷத்திற்காகவும் வேலைக்கு செல்லுவது கவனத்தை ஈர்த்துள்ளது.

சீனாவில் உள்ள ஒரு வயதான பெண்மணி ஒருவர் ஒரு வீட்டில் பாத்திரம் கழுவும் வேலை செய்கிறார். அந்த வேலை செய்வதற்கு நான்கு கோடி மதிப்புள்ள Bentley காரில்தான் வருகிறார். இது தொடர்பான வீடியோ வெளியானதையடுத்து இவர் சீனாவில் வைரலாகி வருகிறார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்த பெண்மணி ‘நான் வசதியாக பின்னணியை கொண்டவள்தான். ஆனாலும் வீட்டில் சும்மா இருக்க பிடிக்கவில்லை.. சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வேலையை செய்து வருகிறேன். என்று கூறியிருக்கிறார்.
அவரின் இந்த எளிமையையும், வேலையின் மீது அவர் காட்டும் ஆர்வத்தையும் சீன மக்கள் பாராட்டி வருகிறார்கள்.
அடுத்த கட்டுரையில்
மெட்ரோ வசம் செல்லும் பறக்கும் ரயில்: ரூ.4,500 கோடியில் சென்னை கடற்கரை - பரங்கிமலை வழித்தடம் அதிரடி மாற்றம்!