இப்படி நடக்கும்னு நான் நினைக்கல!.. நாஞ்சில் விஜயனுக்கு திருநங்கை வைஷ்ணவி கோரிக்கை!...
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது உள்ளிட்ட சில காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவருக்கு திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் திருநங்கை வைஷ்ணவி என்பவர் சில மாதங்களுக்கு முன்பு நாஞ்சில் விஜயன் தன்னோடு பழகி தன்னை ஏமாற்றிவிட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறியிருந்தார். ஆனால் அந்த புகாரை நாஞ்சில் விஜயன் மறுத்தார்..
இரண்டு நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் எனது மனைவியை பிரிந்து விட்டேன்.. சமூகத்தில் என் மீது என்ன விமர்சனம் இருந்தாலும் என் குடும்பத்தில் என்னை நம்புவார்கள் என்று நினைத்தேன்.. ஆனால் ஒரு சண்டையில் என் மாமியார் திருநங்கையை விட்டுவிட்டுதானே என் பெண்ணை திருமணம் செய்து கொண்டாய் என்று கேட்டு விட்டார். இப்போது நான் மனைவியுடன் இல்லை.. திருநங்கை வைஷ்ணவி என் மீது புகார் கூறிய போது திருநங்கையின் சாபம் சும்மா விடாது என்று நீங்கள் எல்லோரும் கூறினீர்கள். அந்த சாபம் தற்போது பழித்து விட்டது என்று பதிவிட்டிருந்தார். அதன்பின் அந்த பதிவை அவரே நீக்கிவிட்டார்.
இந்நிலையில், திருநங்கை வைஷ்ணவி ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், நாஞ்சில் விஜயனும், அவரது மனைவியும் பிரியவேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.. எனக்கு நியாயம் கிடைக்கும் என்று என்பதற்காக மட்டுமே நான் போராடினேன்.. நான் சாபம் விட்டது உண்மைதான்.. ஆனால், கணவன் மனைவி இருவரையும் பிரிக்க வேண்டும் என்கிற நோக்கம் எனக்கு இல்லை.. நாஞ்சில் விஜயன் அவரின் மனைவியுடன் வாழ வேண்டும் என்பதே எனது ஆசை.. நான் பேசியதை தற்போது வேறு மாதிரி சித்தரிப்பது எனக்கு வேதனையாக இருக்கிறது என அதில் கூறியிருக்கிறார்..