செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By
Last Updated : புதன், 19 ஜூன் 2019 (12:53 IST)

மேஜிக் மேனாக அசத்தும் தனுஷ்! பக்கிரி படத்தின் புதிய ட்ரைலர் வீடியோ!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுக்கு போட்டியாக வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து அசாத்தியமாக நடித்து அதிரவைப்பவர் தனுஷ். நடிப்பதில் மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கம், பாடலாசிரியர், பாடகர்  என பல பரிமாணங்களை எடுத்து அத்தனையிலும் வெற்றி காண்பவர் தனுஷ் .
 

 
கென் ஸ்காட் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷிற்கு  ஜோடியாக  பர்காத் அப்தி, ஜெராடு ஜூக்னாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹாலிவுட் படம் தி எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆப் தி பகிர். பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இப்படம் தமிழில் பக்கிரி என்ற டைட்டிலில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் தமிழ் உரிமையை விக்ரம் வேதா பட தயாரிப்பாளர் ஷஷிகாந்த்தின் YNOTX நிறுவனம் கைப்பற்றியுள்ளனர்.
 
பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பபை பெற்ற இப்படத்தின் புதிய ட்ரைலர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. தனுஷ் மேஜிக் கலைஞராக நடித்துள்ள இப்படம்  வருகிற  ஜூன் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.