வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 12 ஜூன் 2019 (15:53 IST)

என் மாமனாரை போல் யாரும் வரமுடியாது - மனம் திறந்த தனுஷ்!

தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் நடிப்பையும் தாண்டி பாடலாசிரியர், இயக்குனர் என பல்வேறு பரிமாணங்களை கொண்டு உச்ச நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்ததை அடுத்து பாலிவுட்டில் ராஞ்சனா மற்றும் ஷமிதாப் உள்ளிட்ட படங்களில் நடித்து பாலிவுட்டில் தனது கால்தடத்தை பதித்திருந்தார். 


 
அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்' (The Extraordinary Journey of the Fakir) என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் கதாநாயகனாக தடம்பதித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து வரும் 21ம் தேதி இப்படம் இந்தியாவில் ரிலீஸாக உள்ளது.
 
பிரான்சில் கடந்தாண்டு வெளியான இந்த படம் பெரும்வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாது, நார்வே சர்வதேச திரைப்பட விருது மற்றும் ரே ஆப் சன்ஷைன் விருது என இரண்டு சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது.


 
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டிவரும் நடிகர் தனுஷ் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனது மாமனார் ரஜினிகாந்த்தை பற்றி மனம் திறந்து பேசினார். அவர் கூறியதாவது, ரஜினி சார் மாதிரி சான்ஸே இல்லை. அவர் போன்று யாராலும் நடிக்கவே முடியாது. பிற குடும்பங்களில் மாமனாரும், மருமகனும் எப்படி பேசிக் கொள்வார்களோ அது போன்று தான் நானும், அவரும் பேசுவோம். என்ன நாங்கள் இருவரும் ஒரே துறையில் இருப்பதால் சில நேரம் வேலை தொடர்பாகவும் பேசிக் கொள்வோம் என்கிறார் தனுஷ்.