புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2019 (15:47 IST)

பக்கிரி தனமா ப்ரமோஷன் செய்யும் தனுஷின் பக்கிரி படக்குழு!

தனுஷின் பக்கிரி படக்குழுவினர் யூடியூபில் லைக்-க்குகளை தங்களாகவே போட்டுக்கொள்கிறார்களோ என சந்தேகம் எழுந்துள்ளது. 
 
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுக்கு போட்டியாக வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து அசாத்தியமாக நடித்து அதிரவைப்பவர் தனுஷ். 
 
கென் ஸ்காட் இயக்கியுள்ள தனுஷ், பர்காத் அப்தி, ஜெராடு ஜூக்னாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹாலிவுட் படம் தி எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆப் தி பகிர். பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இப்படம் தமிழில் பக்கிரி என்ற டைட்டிலில் உருவாகியுள்ளது. 
 
இந்த படத்தின் தமிழ் உரிமையை விக்ரம் வேதா பட தயாரிப்பாளர் ஷஷிகாந்த்தின் YNOTX நிறுவனம் கைப்பற்றியுள்ளனர். இப்படத்தின் தமிழ் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த டிரைலரின் வியூஸ் எண்ணிக்கையும், லைக் செய்தோரின் எண்ணிக்கையும் ஒரே மாதிரியாக உள்ளது. இதில் தனியே டிஸ்லைக்கும் உள்ளது. 
 
ஒரு வீடியோவை பார்த்தாம் மட்டுமே அதற்கு லைக், டிஸ்லைக் போட முடியும். அதே போல் ஒன்று லைக் அல்லது டிஸ்லைக் மட்டும்தான் செய்ய முடியும். அப்படி இருக்க வியூஸ் எண்ணிக்கையும், லைக் செய்தோரின் எண்ணிக்கையும் சமமாக காட்டியது ஏன் என தெரிவில்லை. 
 
சமீபகாலமாக யூடியூபில் இந்த பிரச்சனை இருந்து வருவதால் அதனால் ஏற்பட்ட குழப்பமாகவும் இது இருக்க கூடும்.