தொடர்புடைய செய்திகள்
- 'விஸ்வாசம்' படத்துடன் கனெக்சன் ஆகும் தனுஷின் அடுத்த 2 படங்கள்!
- ஹாலிவுட்டிற்கு இணையாக மாபெரும் சாதனை படைத்த ‘ரவுடிபேபி’
- தென்காசி மக்களவை தேர்தல் 2019 நேரலை | tenkasi Lok Sabha Election 2019 Live Result
- கார்த்திக் சுப்பராஜ் & விஜய் – இணையும் புது கூட்டணி !
- அசுர வேட்டை விரைவில் – வெளியானது அசுரன் போஸ்டர் !
மேஜிக் மேனாக நடித்துள்ள தனுஷின் ஹாலிவுட் பட ட்ரைலர்!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுக்கு போட்டியாக வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து அசாத்தியமாக நடித்து அதிரவைப்பவர் தனுஷ். நடிப்பதில் மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கம், பாடலாசிரியர், பாடகர் என பல பரிமாணங்களை எடுத்து அத்தனையிலும் வெற்றி காண்பவர் தனுஷ் .
கென் ஸ்காட் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பர்காத் அப்தி, ஜெராடு ஜூக்னாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹாலிவுட் படம் தி எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆப் தி பகிர். பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இப்படம் தமிழில் பக்கிரி என்ற டைட்டிலில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் தமிழ் உரிமையை விக்ரம் வேதா பட தயாரிப்பாளர் ஷஷிகாந்த்தின் YNOTX நிறுவனம் கைப்பற்றியுள்ளனர்.
பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விமர்சகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்ற இப்படத்தின் தமிழ் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் மேஜிக்மேனாக நடித்துள்ள இப்படம் வருகிற ஜூன் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
