விநாயகர் சதுர்த்தி… விஜய் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கு!

Last Modified வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (17:56 IST)

விநாயகர் சதுர்த்தி அன்று விஜய் 65 படத்தின் முதல் அறிவிப்பு வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் விஜய் 65 படம் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளன. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது ரசிகர்களுக்கு தரமான அறிவிப்பு காத்திருக்கிறது.

விநாயகர் சதுர்த்தி அன்று இந்த படம் பற்றிய முதல் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த அறிவிப்பில் படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரம் இருக்கும் எனத் தெரிகிறது.இதில் மேலும் படிக்கவும் :