சிம்பு & வெற்றிமாறன் இணையும் படத்தின் தயாரிப்பாளர் இவரா?.. வெளியான தகவல்!
சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணையவுள்ள வாடிவாசல் திரைப்படம் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறனின் நீண்டகால படமாக்கல் பாணியால் சூர்யா வாடிவாசல் படத்தைத் தற்காலிகமாக கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஒரு படம் உடனடியாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஜூலை மாதமே தொடங்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் ஒரு கேங்ஸ்டர் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணுவே தயாரிப்பார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் சிம்பு மற்றும் வெற்றிமாறன் இணையும் படத்தைத் தயாரிக்கப் போவது துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே சாந்தணு நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவான இராவணக் கோட்டம் படத்தினை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.