1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: ஞாயிறு, 15 ஜூன் 2025 (15:54 IST)

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

Seeman

இன்று தூத்துக்குடியில் கள் எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் அடுத்து ஆடு, மாடுகளுக்கான மாநாடு நடத்தப் போவதாக கூறியுள்ளார்.

 

தமிழகத்தில் கள் எடுப்பதும், விற்பதும் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கள் தமிழர்களின் பாரம்பரிய உணவு என்றும், அதை மதுவாக கருதக் கூடாது என்றும் தொடர்ந்து பேசி வரும் நாம் தமிழர் கட்சி, பனை தமிழ் மக்களின் வாழ்வாதாரமாக உள்ளதாக கூறி வருகிறது.

 

இந்நிலையில் கள் உரிமை என்ற பெயரில் இன்று தூத்துக்குடியில் பனை மரத்தில் ஏறி கள் எடுத்து போராட்டம் நடத்தினார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். அதை தொடர்ந்து பேசிய அவர் “வனத்தில் மேய்ச்சலுக்கு தடை விதிப்பதை எதிர்த்து ஜூலை 10ம் தேதி ஆடு, மாடுகள் மாநாடு நடத்தப்போகிறேன்.

 

அதில் தீர்வு கிடைக்காத நிலையில் 3000 ஆடு, மாடுகளை திரட்டிக் கொண்டு நானே வனத்திற்குள் மேய்க்கச் செல்வேன்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K