வெள்ளி, 10 ஏப்ரல் 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth K
Last Modified: ஞாயிறு, 15 ஜூன் 2025 (09:53 IST)

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

ICC South Africa

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக வரலாற்று சாதனையை பெற்றுள்ளது தென்னாப்பிரிக்க அணி. இந்நிலையில் அணி கேப்டன் பவுமா வெற்றி குறித்து பேசியுள்ளார்.

 

நேற்று நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்று சாம்பியன்ஸ் ஆனது. இதன் மூலம் 27 ஆண்டுகள் கழித்து ஐசிசி கோப்பையை வென்று வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது தென்னாப்பிரிக்கா.

 

சாம்பியன் கோப்பை வென்ற பிறகு பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா “இந்த போட்டிக்காக நாங்கள் கடுமையாக உழைத்தோம். கடந்த நாட்கள் எங்களுக்கு சாதகமாக அமைந்தது. அதேநேரத்தில் மற்றவர்கள் எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் இந்த இடத்திற்குள் வந்து நாங்கள் சிறப்பாக விளையாடி கவனத்தை ஈர்த்துள்ளோம்.

 

ரபாடா அற்புதமான வீரர். ஐசிசி புகழ்பெற்ற வீரர்கள் பட்டியலில் அவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கிறேன், மார்க்ரம் சிறப்பாக விளையாடினார். அவர்கள் இருவரும் தங்கள் தகுதியை நிரூபித்து விளையாடியுள்ளனர். நாங்கள் பலவீனமான அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வந்ததாக பலர் கிண்டல் செய்தனர். ஆனால் இந்த வெற்றியின் மூலம் அவர்களை தகர்த்து இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K