1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 15 ஜூன் 2025 (17:22 IST)

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சமீபகாலமாக தன்னை அப்பா என்று பொதுமக்கள் அன்புடன் அழைக்கும் போது பெருமையாக இருக்கிறது என்று கூறிய நிலையில் உண்மையான அப்பாக்களுக்கு வாழ்த்துக்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளதை அடுத்து இந்த பதிவுக்கு கமெண்ட்ஸ்களாக முதல்வரை சீண்டுகிறாரா எடப்பாடி பழனிச்சாமி என பதிவாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இன்று உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்து பதிவில் கூறியிருப்பதாவது:
 
இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, பிள்ளைகளை அன்போடு வளர்த்து, உழைப்பின் மூலம் வழிகாட்டி, தன் குடும்பத்தின் அடித்தளமாய்த் திகழும் அனைத்து உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
தமிழ்நாட்டின் கொள்கை தந்தைகளாக, இன்றளவும் நம்மை வழிநடத்தும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகிய ஒப்பற்ற தலைவர்களுக்கும் இந்நாளில் எனது புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன்.
 
Edited by Siva