தொடர்புடைய செய்திகள்
- ‘புல்லரிக்குது தம்பி. என் அப்பா ஞாபகம் வந்துடுச்சு’.. டூரிஸ்ட் பேமிலி இயக்குனரைப் பாராட்டிய ஆட்டோ ஓட்டுனர்!
- சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது இதற்காகதான்… சிம்ரன் பகிர்ந்த தகவல்!
- பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!
- மம்பட்டியான் பாடலைப் பயன்படுத்த அனுமதி கேக்கல… இப்ப நான்தான் அவங்களுக்கு காசு கொடுக்கணும்- தியாகராஜன் பதில்!
- சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த நடிகர் முருகன் காலமானார்… ரசிகர்கள் அஞ்சலி!
நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் குட்னைட் மற்றும் லவ்வர் ஆகிய படங்களுக்கு அடுத்தப் படமாக டூரிஸ்ட் பேமிலி படம் கடந்த மே 1 ஆம் தேதி ரிலீஸானது. படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்க, சிம்ரன், யோகி பாபு மற்றும் சசிகுமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.
இந்த படம் வெளியாகி திரையரங்குகள் மூலமாக மட்டும் சுமார் 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது. தற்போது ஓடிடியில் வெளியாகி ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தற்போது தமிழ் சினிமாவின் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். இந்த படத்தை ஏற்கனவே பாராட்டிய ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் அபிஷனை அழைத்து நேரில் பாராட்டியுள்ளார்.
இது சம்மந்தமாக அபிஷன் ரஜினியோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக இப்போது உணர்கிறேன். அவர் என்னை அழைத்த விதமும், என்னைக் கட்டியணைத்த விதமும்- எனக்குப் புல்லரிப்பைக் கொடுத்தது. அவரின் ஒரே ஒரு சிரிப்பு என்னுடையக் குழந்தைக் கனவுகளை எல்லாம் நிறைவேற்றிய உணர்வைக் கொடுத்துள்ளது. இதைவிட பெரிய உத்வேகத்தையோ, ஆசிர்வாதத்தையோக் கேட்க முடியாது. லவ் யூ தலைவா” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
