1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: ஞாயிறு, 15 ஜூன் 2025 (16:07 IST)

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

Manali zipline accident

மணாலியில் ஸிப்லைனில் சென்ற த்ரிஷா என்ற பெண் கயிறு அறுந்து பள்ளத்தில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இமாச்சல பிரதேசத்தில் உள்ள மணாலி புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்கி வரும் நிலையில் அங்கு ஸிப்லைன் உள்ளிட்ட மலை சாகச விளையாட்டுகள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன.

 

இந்நிலையில் சமீபத்தில் நாக்பூரை சேர்ந்த த்ரிஷா என்ற பெண் ஸிப்லைனரில் பயணித்தார். பாதி வழியில் அந்தரத்தில் அவர் தொங்கிக் கொண்டிருந்தபோது திடீரென அவர் மீது கட்டியிருந்த கயிறு அறுந்தது. இதில் த்ரிஷா 30 அடி உயரத்திலிருந்து கீழே இருந்த பாறைகள் மீது விழுந்தார்.

 

படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

 

Edit by Prasanth.K