1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 அக்டோபர் 2022 (10:24 IST)

பொன்னியின் செல்வன் வேற லெவல்.. அதோட கம்பேர் பண்ணாதீங்க! – நாஜர்ஜூனா!

Nagarjuna
பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர படத்தை மற்ற படங்களோடு கம்பேர் செய்ய வேண்டாம் என நடிகர் நாகர்ஜூனா தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள படம் பொன்னியின் செல்வன். கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வனின் கதையை தழுவிய இந்த படத்தை காண பலரும் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சரித்திர கால கதை என்பதால் பெரிதும் போர் காட்சிகளை கிராபிக்ஸ் கொண்டு அமைக்காமல் இயல்பான போர் காட்சிகள் போலவே அமைத்துள்ளனர். இந்த படம் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் அதேசமயம் பாகுபலி போல பிரம்மாண்ட காட்சிகள் இல்லாமல் இருப்பதை சிலர் குறையாகவும் சொல்லி வருகின்றனர்.
Ponniyin Selvan


பாகுபலியோடு பொன்னியின் செல்வனை ஒப்பிட கூடாது. பாகுபலி புனைவு கதை. ஆனால் பொன்னியின் செல்வன் உண்மை வரலாற்றை அடிப்படையாக கொண்டது என பலரும் வாதிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வனுக்கு ஆதரவாக பேசியுள்ள நடிகர் நாகர்ஜூனா “நானும் பொன்னியின் செல்வன் நாவலை வாசித்துள்ளேன். பொன்னியின் செல்வன் படத்தை பாகுபலியோடு ஒப்பிடாதீர்கள். பொன்னியின் செல்வன் மிகப்பெரும் வெற்றி அடைந்துள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என அவர் கூறியுள்ளார்.