பொன்னியின் செல்வனுக்கு பிறகு ரஜினி- மணிரத்னம் கூட்டணி இணைகிறதா?
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 3 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்குப் பிறகு இயக்குனர் மணிரத்னம் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணி இணைய வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ரஜினி தரப்பில் இதற்கான முன்னெடுப்பை ரஜினி தரப்பினர் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இருவரும் இணைந்து ஏற்கனவே தளபதி படத்திற்காக இணைந்தது குறிப்பிடத்தக்கது.