திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 3 அக்டோபர் 2022 (17:27 IST)

நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பம்?

nandhini aiswaryarai
கர்ப்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில்  மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்.  இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு, முன்னணி நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2011 ஆம் ஆண்டு ஆராதரனா பச்சன் பிறந்தார்.

தற்போதும் சினிமாவில் முன்னனி நடிகையாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில்  நந்தினி என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் ரூ.200 கோடி வசூலித்துள்ளது.
 

இப்படத்தில் நந்தினி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த  ஐஸ்வர்யா ராயின்  நடிப்புக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா 10 ஆண்டுகளுக்குப் பின்,  மீண்டும் கர்ப்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஆனால், ஐஸ்வர்யா ராய் வட்டாரத்தில் இதுகுறித்து உறுதிப்படுத்தப்படவில்லை.

Edited by Sinoj