வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 4 அக்டோபர் 2022 (08:38 IST)

எம் ஜி ஆர் அறிவித்த பொன்னியின் செல்வன் போஸ்டரைப் பகிர்ந்த பார்த்திபன்!

பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க எம்ஜி ஆர் மற்றும் கமல் முயன்று அது நிறைவடையாத நிலையில் இயக்குனர் மணிரத்னம் தற்போது சாத்தியமாக்கியுள்ளார். அவரும் ஏற்கனவே ஒருமுறை தொடங்கி ஆனால் அதை முடிக்காமல் கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நாவலை முதல் முறையாக படமாக்க விருப்பப்பட்டவர் எம்ஜிஅர். தன்னுடைய தயாரிப்பில் இந்த படத்தை தானே இயக்கி இரட்டை வேடத்தில் நடிக்கவும் ஆசைப்பட்டார். அத்ற்கான அறிவெப்பெல்லாம் வெளியாகி போஸ்டர் கூட வெளியிடப்பட்டது. ஆனால் படம் தொடங்கவில்லை.

இந்நிலையில் இப்போது அந்த போஸ்டரை இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.