1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 21 மே 2021 (12:54 IST)

எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை… ராயுடு கலாய்த்தது பற்றி விஜய் ஷங்கர்!

உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படாத விரக்தியில் அம்பாத்தி ராயுடு விஜய் சங்கரை கலாய்த்திருந்தார்.

2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பைக்கான இந்திய அணியில்.அதிர்ச்சியளிக்கும் விதமாக அம்பாத்தி ராயுடு இடம்பெறவில்லை.  அவருக்குப் பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்வு குறித்து இந்திய அணித் தேர்வாளர் எம்.எஸ்.கே. பிரசாத்திடம் கேள்வி எழுப்பியபோது ‘விஜய் சங்கர் ஒரு 3டி பிளெயர். அதனால்தான் அவரை தேர்வு செய்தோம்’ எனக் கூறினார். இதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக அம்பாத்தி ராயுடு டிவிட்டரில்’ உலகக்கோப்பையைக் காண இப்போதுதான் 3 டி கண்ணாடி வாங்கியிருக்கிறேன்’ எனத் தெரிவித்திருந்தார். ராயுடுவின் இந்த கமெண்ட் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் இப்போது விஜய் ஷங்கர் அதுகுறித்து பேசியுள்ளார். அதில் ‘எனக்கும் ராயுடுவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் நன்றாக பேசிக்கொள்வோம். எனக்கு அவரிடம் எந்த மனக்கசப்பும் இல்லை’ எனக் கூறியுள்ளார்.