ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 20 மே 2021 (12:06 IST)

உலகக்கோப்பையில் தோற்றதால் எங்களுக்கு கொலை மிரட்டல் வந்தது… கிரிக்கெட் வீரர் பகிர்ந்த ரகசியம்!

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாப் டு பிளசீஸ் தனக்கும் மனைவிக்கும் வந்த கொலை மிரட்டல்கள் குறித்து பேசியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் பாப் டு பிளசீஸ் 2011 ஆம் ஆண்டு காலிறுதிப் போட்டியில் நியுசிலாந்து அணியுடனான தோல்விக்குப் பிறகு தனக்கும் தனது மனைவிக்கும் தனிப்பட்ட முறையில் கொலை மிரட்டல் வந்தது எனக் கூறியுள்ளார். அதனால் சிறிது காலத்துக்கு சமூகவலைதளங்களை விட்டு விலகியதாகவும் கூறியுள்ளார்.