நடுவரை விரட்டி விரட்டி அடித்த வீரர்கள்.. கலவர பூமியான பாகிஸ்தான் மைதானம்..
பாகிஸ்தானில் நடைபெற்ற நேஷன்ஸ் கேம்ஸ் கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தின் முடிவில், பாகிஸ்தான் ஆர்மி அணிக்கும், WAPDA அணிக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் ஆர்மி அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
போட்டி முடிந்த பிறகு, நடுவரின் தீர்ப்பால் அதிருப்தியடைந்த WAPDA அணியின் சில வீரர்கள், நடுவரை அவரது அறை வரை துரத்தி சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சண்டையின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த மோதலில் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் காயமடைந்தனர்.
இந்த அநாகரிகமான சம்பவம் குறித்து பாகிஸ்தான் ஒலிம்பிக் சங்கம் மற்றும் கால்பந்து சம்மேளனம் ஆகியவை இணைந்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளன.
தவறு செய்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.
Edited by Mahendran