செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 19 மே 2021 (16:29 IST)

காலிஸ் போல நானும் விளையாடுவேன்… விஜய் ஷங்கரின் ஆதங்கம்!

இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் ஷங்கர் தன்னால் காலிஸ் மற்றும் ஷேன் வாட்சன் போல விளையாட முடியும் எனக் கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான உலககோப்பை அணிக்கான பட்டியலில் விஜய் ஷங்கரின் பெயர் இடம்பெற்றதில் இருந்தே சர்ச்சைகளை சந்திக்க தொடங்கியது. அம்பாத்தி ராயுடு நான்காம் இடத்தில் சிறப்பாக விளையாடி வந்தாலும் அவருக்கு பதிலாக விஜய் சங்கரை எடுத்தது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. ஆனாலும் ஷங்கருக்கு காயம் ஏற்பட்டதால் அவரால் அணியில் விளையாட முடியவில்லை. மேலும் இந்திய அணியிலும் அதன் பிறகு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

இந்நிலையில் விஜய் ஷங்கர் தன் ஆட்டத்திறன் குறித்து ‘என்னால் ஜாக் காலிஸ் மற்றும் ஷேன் வாட்சன் போல ரன்களைக் குவிக்க முடியும். ஆல்ரவுண்டர் என்பதால் 6 ஆம் இடத்தில்தான் விளையாட வேண்டும் என்பது இல்லை. 3 அல்லது 4 ஆம் இடத்தில் இறங்கினால் என்னால் சிறப்பாக விளையாட முடியும். அப்படி சிறப்பாக விளையாடவில்லை என்றால் என்னை அணியை விட்டு நீக்குவதில் ஒரு அர்த்தம் உள்ளது’ எனக் கூறியுள்ளார்.