வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 19 மே 2021 (08:18 IST)

அதற்கு சான்ஸே இல்லை… டிவில்லியர்ஸ் முடிவால் தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் சோகம்!

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்காக உலகக்கோப்பை டி 20 உலகக்கோப்பை தொடரில் விளையாட விருப்பம் இல்லை என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் எனவும் அழைக்கப்படும் டிவில்லியர்ஸ் 2018 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதற்குப் பிறகு ஆம்லா உள்ளிட்ட வீரர்களும் ஓய்வு பெற்றதால் தென்னாப்பிரிக்கா அணி அதளபாதாளத்துக்கு சென்றுள்ளது. இதனால் மீண்டும் டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்பவேண்டும் என்ற பேச்சு எழுந்தது. இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் டி 20 உலகக்கோப்பையில் அவர் களம்காணுவார் எனவும் நம்பிக்கையளிக்கும் செய்திகள் வெளியாகின.

ஆனால் இப்போது அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஓய்வை திரும்ப பெறும் முடிவில் இல்லை என்று அவர் தெரிவித்துவிட்டாராம்.