செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 11 மே 2021 (12:13 IST)

மீண்டும் இலங்கை அணிக்கு திரும்பும் லசித் மலிங்கா… உலகக்கோப்பையில் களமிறங்குகிறாரா?

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா மீண்டும் அந்த அணிக்காக உலகக்கோப்பை டி 20 தொடரில் விளையாட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இலங்கை அணி அதன் முன்னணி வீரர்களின் ஓய்வுக்குப் பின் அதல பாதாளத்துக்கு சென்றுள்ளது. உள்ளூர் தொடர்களில் கூட மண்ணைக் கவ்வ ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அந்த அணியின் டி 20 கேப்டனாக செயல்பட்ட லசித் மலிங்கா ஓராண்டுக்கும் மேலாக விளையாடாமல் இருந்தார். இதனால் அவர் கிட்டத்தட்ட ஓய்வு பெற்றுவிட்டதாகவே சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவர் இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் டி 20 உலகக்கோப்பையில் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.